குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேங்கபாறை விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (27) மற்றும் புல்லுவிளை பகுதி அபிஷேக் (26) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
