குளச்சல்: பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

0
309

குளச்சலில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்படி குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி குளச்சலில் நடந்தது. விகேபி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய இப்பேரணியை தலைமை ஆசிரியர் இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரநாதன், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்ட் வழியாக காந்தி சந்திப்பு சென்று மீண்டும் பள்ளி மைதானம் சென்றடைந்தது. மாணவர்கள் ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என கோஷமிட்டு சென்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here