Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர் மாயம்

குளச்சல்: மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர் மாயம்

0

குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜூடின் (48). மீனவரான இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம்(நவம்பர் 13) மாலை தனது வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றார். இரவு 7 மணி அளவில் இனையம் கடல் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. அப்போது மனைவியிடம் பேசி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மற்றும் மீனவர்கள் வள்ளங்களில் நேற்று (14-ம் தேதி) சம்பவ இடத்தில் சென்று தேடினர். அப்போது அவர் சென்ற வள்ளம் தனியாக நின்றது. ஆரோக்கிய ஜூடினை காணவில்லை. மீனவர்கள் வள்ளத்தை மீட்டு கரை சேர்த்தனர். மின்னல் தாக்கியதில் வள்ளத்தில் இருந்த பேட்டரி வெடித்து ஆரோக்கிய ஜூடின் எதிர்பாராமல் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தது தெரிய வந்தது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இது குறித்து அவர் மனைவி மரிய சாந்தி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version