Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

0

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த ஹெலன் என்பவர் இறங்கும் போது கையில் வைத்திருந்த 2.67 லட்சம் ரூபாய் பணத்தை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். இதை கவனித்த அன்வர்சாதிக் பணத்தை பத்திரமாக எடுத்து குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனிஷ்லியோன் என்பவரிடம் ஒப்படைத்தார். காவல் துறையினர் மேற்படி உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் அன்வர்சாதிக்கின் நேர்மையை பாராட்டி மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின், அன்வர்சாதிக்கை நேரில் அழைத்து நேர்மையை பாராட்டி கௌரவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version