குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் தலைமையிலான போலீசார் நேற்று (7-ம் தேதி) மாலையில் களியங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது விதியை மீறி அதிக பாரம் ஏற்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 28 ஆயிரம் அபராதமும், போதையில் வாகன ஓட்டியதாக டிரைவருக்கு ரூபாய் 10, 000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதை போன்று மண்டைக்காடு பகுதியில் வாகன நடத்தியதில் கேரள பதிவு எண் கொண்ட மினி லாரிக்கு 44 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.














