குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று குளச்சல் அருகே உள்ள கோடிமனை கிராமம் முதல் தேங்காப்பட்டணம் வரையிலான பகுதிகளில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். குளச்சல் டிஎஸ்பி காந்தி, இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
