Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: வீட்டுக் கூரையிலிருந்து விழுந்து பிளம்பர் பலி

குளச்சல்: வீட்டுக் கூரையிலிருந்து விழுந்து பிளம்பர் பலி

0

குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் ஐசக். இவர் கடந்த 18ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது சன் ஷேடில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறிவிழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக குளச்சல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 4) அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிளசி பொன்மலர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version