குளச்சல் அருகே சைமன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மனைவி சிலுவைமேரி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று (4-ம் தேதி) சாஸ்தான்கோவில் பகுதியில் மீன் வியாபாரத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் சிலுவைமேரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரைத் தேடி வருகின்றனர்.














