கன்னியாகுமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி (21) என்பவர், குளச்சல் பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையின் அந்தரங்கப் பகுதியை கத்திரிக்கோலால் வெட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளச்சல் போலீசார் சகாய ஜோஸ் ஆண்டனியை கைது செய்தனர். விசாரணையில், திருடச் சென்றபோது எதுவும் கிடைக்காததால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.