Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: மீன்பிடித் தொழிலாளியின் பைக் திருட்டு

குளச்சல்: மீன்பிடித் தொழிலாளியின் பைக் திருட்டு

0

குளச்சல் அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (49). மீன்பிடித் தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் இன்று காலை பார்த்தபோது அவரது பைக் நிறுத்தியிருந்த இடத்தில் காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கைத் திருடிச் சென்றதுத் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அமல்ராஜ் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டுப் போன பைக்கைத் தேடிவருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version