குளச்சல்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி

0
196

குளச்சல் லியோன்நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தார். தாயார் டயானா குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here