காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி சிவா எம்பி உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர், கனியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.