பாரத், ‘குடும்பஸ்தன்’ சான்வி மேக்னா நடிக்கும் படத்துக்கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கும் இதில் பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.
‘மாவீரன்’, ‘3 பிஹெச்கே’ போன்ற படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். ரொமான்டிக் காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
