கொற்றிக்கோடு அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதி சேர்ந்தவர் அமுதா (53). நேற்று(டிச.1) மாலை தனது வீட்டருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவரை பார்த்தது சந்தேகம் அடைந்த அமுதா யாரை பார்க்க வேண்டும் என்று விசாரித்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென அந்த வாலிபர் அமுதாவின் கழுத்தில் கிடந்த கவரிங் செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அமுதா கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














