Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்

கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்

0

குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி பங்குனி பரணி தூக்க திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் நிறைவு நாளான 22 ஆம் தேதி 1124 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற உள்ளது. இதற்காக, குழந்தைகளை தூக்கும் தூக்கக்காரர்களின் நமஸ்காரம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி, தொடர்ந்து 21 ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும். தூக்கக்காரர்களின் பக்தி மேன்மையை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version