குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு எம் சாண்ட், பாறைப் பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று 22-ம் தேதி காலை சுமார் 5 மணி அளவில் கொல்லங்கோடு கண்ணனாகம் பகுதியில் பாஸ் போட்டு வந்த டாரஸ் டிப்பர் லாரி கொல்லங்கோடு செல்லாமல் செங்கவிளை சந்திப்பில் இருந்து கேரளாவுக்கு திரும்பியுள்ளது. இதை கண்டு லாரியை பின் தொடர்ந்து வந்த மார்த்தாண்டம் எஸ்.ஐ. பெனடிக்ட் ராஜ் என்பவர் அந்த லாரியை டிரைவருடன் மடக்கி பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














