சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, மாமியாரின் சகோதரர் இஸ்ரவேல் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்ரவேலைத் தேடி வருகின்றனர்.