கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் தலைமையில் போலீசார் சங்குருட்டி என்ற பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்ற முதியவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பொழியூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (70) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.