Home கன்னியாகுமரி செய்திகள் குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை

குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை

0

நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர விக்னேஷ் (37) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி (54). இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்திர விக்னேஷ் விஜயகுமாரியின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு குழித்துறை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

நேற்று (6-ம் தேதி) வழக்கு விசாரணை நடந்து முடிந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் என்பவர் சந்திர விக்னேஷுக்கு 5 வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து நித்திரவிளை போலீசார் சந்திர விக்னேஷை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version