சூப்​பர்​ நேச்​சுரல் த்ரில்லராக உருவாகும் ‘மண்டவெட்டி’

0
101

நடிகை கோமலி பிர​சாத் முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மண்டவெட்டி’ என்று தலைப்பு வைத்துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு சென்​னை​யில் பூஜையுடன் தொடங்​கியது. சரண்​ராஜ் செந்​தில்​கு​மார் இயக்​கி, தனது டஸ்​கர்ஸ் டென் பிக்​சர்ஸ் சார்​பில் தயாரிக்கும் இந்​தப் படத்​தில் பி.எல்​.தேனப்​பன், கஜராஜ், அம்​ரிதா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திர ங்களில் நடிக்கின்​றனர்.

சூப்​பர்​நேச்​சுரல் க்ரைம் த்ரில்​ல​ராக உரு​வாகும் இப்​படம், ஒரு பெண்​ணின் உளவியல் மற்​றும் உணர்​வுப்​பூர்​வ​மான பயணத்தை யும் மனித உணர்​வு​களின் ஆழத்​தை​யும் அதற்கு பின்​னால் உள்ள மர்​மத்​தை​யும் பரபரப்​பான களத்தில் பேச இருக்​கிறது.

இப்​படம் பற்றி இயக்​குநர் சரண்​ராஜ் செந்​தில்​கு​மார் கூறும்​போது, “’வெள்​ளகு​திர’ படத்​துக்​குப் பிறகு இதை இயக்​கு​கிறேன். நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உருவாகும் கதையை கொண்ட படம் இது. உணர்​வு​கள் மற்​றும் துணிச்​சலான கதை சொல்​லலுடன் ரசிகர்​களுக்கு புதிய அனுபவத்தை இந்​தப் படம் கொடுக்​கும். பிர​காஷ் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்​கு, தீபக் வேணு கோபால் இசை அமைக்​கிறார்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here