கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.