குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு நேற்று (நவம்பர் 21) வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ ஒரு கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: – கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பல சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பரிசேரியில் இருந்து திங்கள் சந்தை வழியாக புதுக்கடை செல்லும் சாலையில் திக்கணங்கோடு முதல் புக்கடை வரை மழை நீர் வடிகால் ஒடை அமைத்து சாலை சீரமைக்க வேண்டும்.
இதே போல் சேதம் அடைந்த மங்காடு – கணபதியான் கடவு சாலை போன்ற ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரி – பழைய உச்சக்கடை சாலை, கீழ்குளம் இனயம்புத்தன்துறை சாலை போன்ற சாலைகளும் சீரமைக்க வேண்டும். மேலும் கிள்ளியூரை தலைமை இடமாகக் கொண்டு மாநில நெடுஞ்சாலை துறை கிள்ளியூர் உட்கோட்டம் அமைக்க வேண்டும், கிள்ளியூரில் பயணிகள் தங்கும் விடுதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.














