கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 123-வது பிறந்த தின விழா கருங்கலில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கிள்ளியூர் பரமானந்தபுரம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














