வருமான வரித்துறை அதிகாரியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றிய கிளி ஜோசியர்

0
20

பெங்​களூரு​வில் உள்ள பார​தி நகரை சேர்ந்த 55 வயதான ரமேஷ் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது) வரு​மான வரித்துறை​யில் அதி​காரி​யாக கடந்த 30 ஆண்​டு​களாக பணியாற்றி வரு​கிறார்.

இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பார​திநகர் காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் கூறிய​தாவது: கடந்த டிசம்​பரில் கிளி ஜோசி​யர் சேகர் (59) எனக்கு அறி​முக​மா​னார். எனது ஜாதகத்தை ஆராய்ந்த பின்​னர், கிளி ஜோசி​யம் பார்த்​தார். எனக்கு பணி இட மாற்​ற​மும், பதவி உயர்​வும் கிடைக்க வேண்​டுமென்​றால் அமாவாசை அன்று இரவு சிறப்பு யாகம் நடத்த வேண்​டும் என கூறி​னார்.

இதற்​காக முதல்​கட்​ட​மாக அவருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்​தேன். பின்​னர் எனது வீட்​டில் உள்ள பணம், தங்க நகைகள், வெள்​ளிப் பொருட்​களை வைத்து ஒரு நாள் முழு​வதும் யாகம் நடத்​தி​னால் செல்​வம் மேலும் குவி​யும் என கூறி​னார்.

இதனால் அவர் கூறிய இடத்​துக்கு ரூ.20 லட்​சத்து 55 ஆயிரம் ரொக்​கம், 193 கிராம் தங்க நகைகள், 1.3 கிலோ வெள்​ளிப் பொருட்​களை கொண்டு சென்று கொடுத்​தேன். பூஜையை முடித்து பொருட்​களை தரு​வ​தாக சொன்ன அவர், பின்​னர் தலைமறை​வா​னார். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

இதையடுத்து பாரதி நகர் போலீ​ஸார் கிளி ஜோசி​யர் சேகரின் செல்​போன் எண்ணை அடிப்​படை​யாகக் கொண்டு விசா​ரணை மேற்​கொண்​டனர். தமிழகத்தை சேர்ந்த அவர், தின​மும் ரயி​லில் பெங்​களூரு​வுக்கு வந்து கிளி ஜோசி​யம் பார்த்து செல்​வது தெரிய​வந்​தது. அவரிடம் கிளி ஜோசி​யம் பார்க்க விரும்​புவ​தாக போலீஸார் ஆசை வார்த்​தைகளைக் கூறி, பெங்​களூரு​வுக்கு வரவழைத்​தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெங்​களூரு​வுக்கு வந்த கிளி ஜோசி​யர் சேகரை கைது செய்​தனர். அவர் மீது 4 பிரிவுகளின் ​கீழ் வழக்​குப்​ ப​திவு செய்து விசா​ரணை மேற்கொண்டு வரு​கின்​றனர். முதல் ​கட்​ட​மாக, அவரிடம் இருந்து ரூ.12 லட்​சம் ரொக்​கம், 147 கிராம்​ தங்​க நகைகளை பறி​முதல்​ செய்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here