திருச்சூர் பூரம் விழா சதி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் கேரள முதல்வர்

0
165

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பூரம் திருவிழாவில் சதி செய்ய சில முயற்சிகள் நடந்தன. இது குறித்து ஏடிஜிபி அஜித்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த அறிக்கை கடந்த மாதம்23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பூரம் விழாவை நடத்த கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் அந்த அறிவிக்கை விரிவானதாக இல்லை. குறைபாடுகள் உள்ளன. பூரம் விழாவில் சதி செய்ய சங்பரிவார் அமைப்புகள்முயற்சித்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமூக விழாவில் இதுபோன்ற இடையூறுகைளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால் பூரம் விழாவில் நடந்த சதி குறித்து 3 கட்ட விசாரணை நடத்தப்படும். பூரம் விழாவில் ஏற்பட்ட சதி தொடர்பாக சட்டம் ஒழுங்குஏடிஜிபி அஜித்குமாரின் தோல்விகள் குறித்து டிஜிபி விசாரணை நடத்துவார். பூரம் விழாவில் நடைபெற்ற குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் குறித்து குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவர். பூரம் விழாவை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் அரசு அதிகாரிகள் தவறினார்களா என்பது குறித்து உளவுத்துறை ஏடிஜிபி விசாரணை நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here