Home சினிமா செய்திகள் கென் கருணாஸின் ‘யூத்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கென் கருணாஸின் ‘யூத்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கென் கருணாஸ். சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பினைத் தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

இதில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக விக்கி, எடிட்டராக நாஷ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version