கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

0
27

கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி என்​. ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்​நிலை​யில், கரூர் நகர காவல் ஆய்​வாளர் மணிவண்​ணன் சில முக்​கிய ஆவணங்​களு​டன் கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் உள்ள சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று ஆஜரா​னார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்​துக்கு மேலாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here