கருங்கல் அருகே உள்ள எட்டணியை சேர்ந்தவர்கள் ஜெயின் ராஜ் (32), சினேகராஜ் (28) நண்பர்கள். இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்தனர். கடந்த 2008- ஜூன் மாதம் 7-ம் தேதி பைக்கில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது குறும்பனை ஜங்ஷன் பகுதியில் வைத்து பின்னால் வேகமாக வந்த பைக் வந்து ஜெயின்ராஜ் பைக் மீது பயங்கரமக மோதியது.
இதில் முன்னாள் சென்ற அரசு பஸ் மீது பைக் மோதி ஜெயின்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சினேகராஜ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக மரணம் விளைவித்த திப்பரமலையை சேர்ந்த பிரேமச்சந்திரன் (37) மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இரணியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அமர்தீன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் பிரேமசந்திரனுக்கு 2 வருட ஜெயில், மொத்தம் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.