Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல்: வகுப்பறையில் மயங்கிய மாணவி உயிரிழப்பு

கருங்கல்: வகுப்பறையில் மயங்கிய மாணவி உயிரிழப்பு

0

பாலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி லெட்சுமி, 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவிக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கருங்கல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version