கருங்கல்: ஆசிரியை வீட்டில் கொள்ளை; 2 பேருக்கு சிறை

0
277

கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் சுனில் சுதர்லின் பாபு மனைவி கிறிஸ்டி நிர்மல் ஜாய் (40) இவர் அரசு பள்ளி ஆசிரியை. கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கிறிஸ்டி பாலப்பள்ளத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட குளச்சல் பகுதி மாயாண்டி என்ற சுஜித் (23), நெல்லை மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்த சுரேஷ்கோபி என்ற ராமய்யா (30)  சேர்ந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 பித்தளை குத்துவிளக்குகள், செம்பு குடம், குட்டுவம்  ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி முயன்றனர்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் பிடித்து கருங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இரணியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்  நேற்று ( 7ம் தேதி)  நீதிபதி அமர்தின் தீர்ப்பு அளித்தார். அதில் மாயாண்டி சுரேஷ்கோபி இரண்டு பேக்கும்  6 வருட சிறைத் தண்டனையும் ரூபாய் 2 ஆயிரம்  அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரேவதி வாதாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here