Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல்: பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த 2 பேர் கைது

கருங்கல்: பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த 2 பேர் கைது

0

கருங்கல் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கருங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் வேன் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ஒருவர் மது குடித்துக் கொண்டிருந்தார். 

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொல்லங்குடி விளையை சேர்ந்த மணிகண்டன் (57) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதே போன்று அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் என்பவர் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் மது குடித்துக் கொண்டிருந்த குறும்பனை அந்தோனியார் தெருவை சேர்ந்த ஜெரால்டு (52) என்பவரையும் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version