திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி.
இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார் கார்த்தி. அப்போது அங்கிருந்த பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “மகன் பிறந்த பிறகு திருப்பதிக்கு வரவே இல்லை. ஆகையால் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தது நன்றாக இருந்தது. அடுத்து ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’ படங்கள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார் கார்த்தி.
தற்போது மித்ரன் இயக்கி வரும் ‘சர்தார் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அதன் படப்பிடிப்பு ஏப்ரலில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி.














