கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை நல்கூரில் உள்ள தேனீ வளர்ப்பு பண்ணைக்கு ஆய்வுப் பணிக்காக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு திறந்த வாகனத்தில் ஏறி, நின்றவாறு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பொறுப்பு தலைமை ஆசிரியர் கிரண் குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.











