கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு

0
18

கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மாத​வி​டாய் விடு​முறைக்கு எதி​ராக வழக்கு நடை​பெற்று வரும் நிலை​யில், அம்​மாநில அரசு பள்​ளி, கல்​லூரி மாணவி​களுக்​கும் மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை அளிக்க மாநில‌ அரசு கடந்த நவம்​பர் 20-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு எதி​ராக கர்​நாடக ஓட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம் தொடர்ந்த வழக்​கில், அம்​மாநில உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​தது.

இந்​நிலை​யில் கர்​நாடக அரசின் தலைமை வழக்​கறிஞர் சசிகிரண் ஷெட்டி நேற்று நீதிபதி எம்​.ஜோதி முன்​னிலை​யில் ஆஜராகி எழுத்​துப்​பூர்​வ​மான வாதத்தை தாக்​கல் செய்​தார். அப்​போது அவர், ‘‘ஜப்​பானில் 1947-ம் ஆண்டே மாத​வி​டாய் காலத்​தில் பெண்​களுக்கு விடு​முறை அளிக்​கும் முறை அமலுக்கு வந்​துள்​ளது. கர்​நாட​கா​வில் இந்த திட்​டம் தற்​போது​தான் அமல்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

மகளிரின் நலனை கருத்​தில் கொண்டு அரசு மேற்​கொண்​டுள்ள இந்த கொள்கை முடி​வில் தனி​யார் நிறு​வனங்​களிடம் அனு​மதி கேட்க வேண்​டிய​தில்​லை” என்​றார்.

இதனை ஏற்ற நீதிப​தி, இவ்​வழக்​கின் ஆட்​சேப மனுக்​கள் மீது விரி​வான விசா​ரணை நடத்த வேண்​டி​யுள்​ளது. எனவே வழக்​கின் அடுத்​தகட்ட விசா​ரணை வரும் ஜனவரி 20-ம் தேதி நடத்​தப்​படும்​” எனக்​கூறி வழக்கை ஒத்​தி​வைத்​தார்.

இந்​நிலை​யில் கர்​நாடக அரசு மாத​வி​டாய் விடு​முறை திட்​டத்தை அம்​மாநிலத்​தில் பள்​ளி, கல்​லூரி​களில் பயிலும் மாணவி​களுக்​கும் நீட்​டிக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​காக மாத​வி​டாய் விடுப்பு கொள்கை சட்​டத்​தில் திருத்​தத்தை மேற்​கொள்ள அரசு முடி​வெடுத்​துள்​ளது. அதன்​படி மாதத்​துக்கு ஒரு நாள் வீதம் ஆண்​டுக்கு 12 நாட்​கள் மாணவி​கள் மாத​வி​டாய் விடு​முறை எடுத்​துக்​கொள்ள அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்​ என தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here