குமரின் காளிமலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து மலை மேல் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தை மாத ஐப்பசியுடன் கூடிய பௌர்ணமியை தொடர்ந்து குடும்ப அர்ச்சனை, ஐஸ்வர்ய பூஜை, ஐப்பசி பூஜை, அலங்கார ஆராதனையோடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித பயணமாக நடந்தும் மலையேறியும், ஜீப்புகள் மூலமும் கோயிலில் வந்து காளியம்மனை வழிபட்டதோடு உபதெய்வங்களான கணபதி, அகத்தியர், சப்த கன்னிகள், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகர் உட்பட தெய்வங்களுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இங்கு பௌர்ணமி அன்று அம்மனை வழிபட்டால் மங்கள்யதோஷம் நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், தீராத நோய்கள் நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.














