சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நேற்று (செப்.,30) தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலை கல்லூரியை சேர்ந்த 21 மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று கட்டண முறையில் போட்டோ எடுக்கும் போட்டோகிராபர்களிடம் போட்டோ எடுக்க கூறி, குழுவாகவும் தனித்தனியாகவும் ஏராளமான போட்டோக்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிலர் வியாபாரிகளிடம் சென்று பொருள்களை வாங்கி கொண்டனர். ஆனால் பணத்தை ஜி பே மூலம் அனுப்புவதாக கூறிவிட்டு, செலுத்தவில்லை. அதிர்ச்சியடைந்த போட்டோகிராபர்கள் மற்றும் வியாபாரிகள் 21 கல்லூரி மாணவர்களையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போலீசார் மாணவர்கள் விசாரணை நடத்தியதில் , அதில் மூன்று மாணவர்கள் இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது ஆன்லைனில் பணம் தருவது கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.