கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர். கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.














