தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் லூர்து அன்னையின் புதிய சிற்றாலயம் (கேபி) அமைக்கப்பட்டு அதன் அர்ச்சிப்பு விழா நேற்று (1-ம் தேதி) நடைபெற்றது.
குழித்துறை மன்ற மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமை தாங்கி புனித லூர்து அன்னை புதிய சிற்றாலயத்தை ஜெபித்து அர்ச்சித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் திருப்பலி நிறைவேற்றி, முதல் திருவிருந்து மற்றும் உறுதிப்பூசல் வழங்கினார். மேலும் பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்குபணியாளர்கள் மரியராஜேந்திரன், ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.