களியல் வனச்சரகப்பகுதி தமிழகம் மற்றும் கேரளா எல்லையை உள்ளடக்கியுள்ளது. கேரளா வனப்பகுதி தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை வரை அடர்ந்த வனப்பகுதிகளாகும். இங்கு விலை உயர்ந்த ஏராளமான மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிலர் சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்றனர். வனத்துறையினர் உடனே பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். 3 பேர் வனப்பகுதிகளில் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபரை விசாரணை நடத்தியதில் அவர் கல்குளம் பகுதி சேர்ந்த அப்பு (50) என்பது தெரியவந்தது. வனத்துறையினர் 15 கிலோ சந்தனமரக்கட்டைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய மூன்று பேரை தேடிவருகிறார்கள்.














