களியக்காவிளை செங்கல் சிவ பார்வதி கோயிலில் இன்று திருவோண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமான பூஜைகளைத் தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் திருவோணத்திற்குத் தேவையான காய், கறி வகைகள், பழங்கள் உள்ளிட்டவை வரிசையாக வைக்கப்பட்டன. சிவன், பார்வதி அருளாசி வழங்கிய காய், கணி வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர் குமார் தலைமை வகித்தார். சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி சிறப்பு பூஜைகள் செய்தார். கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.