களியக்காவிளை: சிலம்பம் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

0
246

குமரி மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் சார்பில் 38 ஆவது மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இப் போட்டியில் சப் ஜூனியர் 35 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற களியக்காவிளை, மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் பினோ ராஜ் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளியில் நேற்று (12-ம் தேதி) நடந்த பாராட்டு விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவரை பாராட்டி கவுரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here