மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முஞ்சிறை வட்டார 24வது மாநாடு கலிங்கராஜபுரத்தில் நேற்று (11-ம் தேதி) மாலை நடைபெற்றது. வட்டார குழு உறுப்பினர் ஜெயா கொடி ஏற்றி வைத்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. வட்டார செயலாளராக அலக்ஸ், மற்றும் 20 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது. மாநாட்டில் ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு வருவாய் கிராமங்களில் மணல் திட்டத்தை கைவிட வேண்டும், குழித்துறை ஆற்றில் கணபதியான் கடவு முதல் தடுப்பணை வரை பக்க சுவர் கட்ட வேண்டும், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் அறிவியல் பூர்வமாக கட்டி ஆபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.