குமரி மாவட்டம் களியல் கிராமத்தை ஒட்டி சிற்றாறு 2 அணை உள்ளது. இந்த அணையை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ரிசார்ட் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூபாய் 3 கோடி 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனையொட்டி விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கர்பட் சிற்றாறு 2 அணை பகுதியில் இன்று (6-ம் தேதி) நேரில் பார்வையிட்டு அந்தப் பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் சுற்றுலாத்திட்ட பயணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வசதிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














