களியக்காவிளை: இந்தியா வந்த 28 மீனவர்களுக்கு வரவேற்பு

0
195

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர். 

இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன் அரசு 31 மீனவர்களை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். மீனவர்களை மீட்க மத்திய அரசு இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக மீனவர்களை அந்த அரசு முன்கூட்டியே விடுவித்தது. 

இதில் 28 மீனவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தயாரான நிலையில் அவர்களை முதல் கட்டமாக பஹ்ரைனில் இருந்து விமான மூலமாக திருவனந்தபுரத்திற்கு நேற்று (18-ம் தேதி) இரவு வந்தனர். அவர்களுக்கு எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் மீனவர் பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் மீனவர் பெரும்பு பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

திருவனந்தபுரம் வந்த மீனவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கேரளா, மண்டைக்காடு புதூர், குளச்சல் மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேருவார்கள் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here