சூரியகோடு பகுதியை சார்ந்தவர் முருகன் (39) இவர் தனியார் மருத்துவமனை நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று (5-ம் தேதி) இவர் களியக்காவிளையில் இருந்து சூரியகோட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அனிஷ் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இந்த பைக் விபத்தில் தூக்கிவீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேலும் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று (6-ம் தேதி) காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














