களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன் (68). இவர் வீட்டை ஒட்டிய பகுதியில் தொழுவம் அமைத்து பசுமாடு வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணி (53) என்பவருக்கு பாலையன் மாட்டுத் தொழுவத்திலிருந்து கழிவுநீர் பாய்ந்து செல்வதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 8-03-2021 அன்று வெளியே சென்று விட்டுத்திரும்பிய பாலையனை மணி தடுத்து நிறுத்தி தகராறு செய்து கீழே தள்ளி மிரட்டல் விடுத்ததில் பாலையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு விசாரணை குழித்துறை சப் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி முதியவர் மீது கொலை முயற்சி நடத்திய மணிக்கு 13 மாத சிறை தண்டனையும் 1500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று (டிச.,2) உத்தரவு பிறப்பித்தார்.














