நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

0
15

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும் விசா​ரணை நடத்தினார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்​தனர். 110-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்​நிலை​யில், தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த வேலு​சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்​பவர் நேற்று உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக உயர்ந்​துள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த, ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஒரு நபர் விசா​ரணை ஆணை​யத்தை தமிழக அரசு அமைத்​தது. நேற்று முன்​தினம் கரூர் வந்த நீதிபதி அருணா ஜெகதீசன், அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களிட​மும், சம்​பவம் நடந்த இடத்​தி​லும் விசா​ரணை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில், கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்த வேலு​சாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த 2 வயது குழந்​தை​யான குரு​விஷ்ணு​வின் வீட்​டிலும், ஏமூர் புதூரைச் சேர்ந்த 5 பேரின் வீடு​களி​லும், வடிவேல் நகர் போலீஸ் குடி​யிருப்​பைச் சேர்ந்த சுகன்யா வீட்​டிலும் நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக நேற்று விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது, கூட்​டத்​துக்கு எப்​படி சென்​றார்​கள், யார் அழைத்​துச் சென்​றது உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​களை அவர் கேட்​டறிந்​தார்.

விசா​ரணை அதி​காரி மாற்​றம்: காவல் துறை தரப்​பில் இந்த வழக்​கின் விசா​ரணை அதி​காரி​யாக கரூர் டிஎஸ்பி செல்​வ​ராஜ் நியமனம் செய்​யப்​பட்​டிருந்​தார். இந்​நிலை​யில், அவர் திடீரென மாற்​றப்​பட்டு விசா​ரணை அதி​காரி​யாக ஏடிஎஸ்பி (தலை​மை​யிடம்) பிரேம் ஆனந்த் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here