இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனும் ஜப்பான் தூதரகமும் இணைந்து சென்னையில் ஜப்பான் திரைப்பட விழாவை இன்று (அக்.15) முதல் அக்.17-ம் தேதி வரை நடத்துகிறது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கோத்தே இன்ஸ்டிடியூட்டில் இப்பட விழா நடக்கிறது.
அக்.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரையிடப்படுகிறது. அக்.16-ல் மாலை 5 மணிக்கு, பிஎல் மெட்டமோர்பிஸ் என்ற படம் திரையிடப்படுகிறது. 75 வயது மூதாட்டிக்கும் 17 வயது மாணவிக்குமான நட்புதான் இதன் கதை. அன்று 7 மணிக்கு ‘த லைன்ஸ் தேட் டிஃபைன் மி’ என்ற படமும் திரையிடப்படுகிறது.
அக்.17-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘அரிஸ்டோகிராட்ஸ்’, அன்று இரவு 7 மணிக்கு ‘ஷியோரி/ஷியோரி’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.