பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்!

0
152

பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடரில் ஜன்​னிக் சின்​னர், மிர்ரா ஆண்ட்​ரீவா உள்​ளிட்​டோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

பாரிஸ் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 166-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ரிச்​சர்ட் காஸ்​கெட்​டுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

3-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்​கில் 88-ம் நிலை வீர​ரான நெதர்​லாந்​தின் ஜெஸ்​பர் டி ஜாங்கை வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆண்ட்​ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் ஆஷ்லின் க்ரூகரை​யும் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த அன் அலியை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here