Home சினிமா செய்திகள் விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ டீசர்!

விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ டீசர்!

0

விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்.

இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால், இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவி ஆகியவை கைப்பற்றி இருக்கின்றன.18-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version